Published : 13,Sep 2017 04:09 PM

தமிழக போலீசார் மிரட்டுகிறார்கள்: கர்நாடக போலீசில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புகார்

TN-Police-threat-us-Dinakaran-support-MLAs-filed-compliant-with-karnataka-police

தமிழக போலீசார் மிரட்டுவதாக, கூர்க் சொகுதி விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கூர்க் பகுதியில் சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த விடுதியில் தமிழக போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். எம்.எல்.ஏ. பழனியப்பன் மீதான வழக்கு ஒன்றிற்காக விசாரணை மேற்கொள்ள தமிழக போலீசார் சென்றது பின்னர் தெரியவந்தது. எம்.எல்.ஏ. பழனியப்பனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, தமிழக காவல்துறையை வைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமி அரசு மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், கர்நாடக போலீஸ் டி.எஸ்.பி.யிடம் பாதுகாப்பு கேட்டு மனு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர். தமிழக போலீஸ் ஒவ்வொரு அறையாக வந்து மிரட்டியதாக தங்களது மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்