Published : 15,Jun 2022 12:35 PM

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்திய கொரோனா திரிபு இப்போது தமிழகத்திலும்?

New-covid-19-subvariant-driving-US-surge-found-in-Maharashtra--Tamil-Nadu

அதிவேகமாக பரவும் ஒமைக்ரான் வகை கொரோனாவின் துணை திரிபான பிஏ 2.12.1 தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தற்போது இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்ராவிலும் இந்த திரிபு பரவ தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும்கூட, இது வலுப்பெறாமல் இருக்க உரிய வழிமுறைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பின்பற்ற வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நேற்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் 6,594 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த நாள்களில் தொடர்ச்சியாக 7,000-ஐ ஒட்டி இதுபோல அதிக பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும், மகாராஷ்ட்ராவிலும் கடந்த நாள்களை விட கொரோனா மிக வேகமாக பதிவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

image

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழொன்றில் பேசியுள்ள மகாராஷ்ட்ரா சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், "பிஏ.2.38 பாதிப்பை தொடர்ந்து, தற்போது பிஏ.2 இங்கு மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை தீவிரமாக செலுத்தி வருகிறது. இது வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளனர். மகாராஷ்ட்ராவை போலவே தமிழ்நாட்டிலும் இந்த திரிபு அதிகம் பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தரவுகளை பொறுத்தவரை, இந்த பிஏ.2 கடந்த வருடத்தில் மிகத்தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. இதிலேயே பிஏ2.12.1 என்ற திரிபு பிரிந்து உருவாகி அதுவும் தனது தாக்கத்தை அதிகமாக செலுத்தியிருந்தது. அமெரிக்க நோய்த்தடுப்பு மையத்தின் தரவின்படி, இந்த பிஏ2.12.1, கொரோனா நோயாளிகளில் 62% பேருக்கு அமெரிக்காவில் ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும்கூட இந்த திரிபு, தீவிரமானதாக இதுவரை பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல் உதவி: TOI

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்