Published : 14,Jun 2022 09:17 AM

கல்லூரி தலைவர் ஆபாசமாக நடந்த விவகாரம்: மாணவ-மாணவியர் கல்விக்கு ஆட்சியர் மாற்று ஏற்பாடு

Virundhunagar-Collector-s-alternative-arrangement-for-education-to-students-who-studiend-in-Arasu-Nursing-college

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தனியார் கல்லூரி சேர்மன் மாணவியிடம் வீடியோ காலில் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் அந்த மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் மேகநாத ரெட்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை `அரசு நர்சிங் கல்லூரி’ என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ், கடந்த 6 மாதத்திற்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாகவும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படும் வீடியோ தற்போது அந்த கல்லூரி மாணவிகளிடம் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வாயிலில் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அம்மாணவிகளை சமரசம் செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

image

இதனை தொடர்ந்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை, காவல்துறையினர் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், கல்லூரியில் தங்கள் எதிர்காலம் குறித்தும் தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும் கல்லூரி மாணவிகள் பெற்றோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் கடந்த ஜூன் 11ம் தேதி திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதாப்படுத்தியும் ஏற்காமல், தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் டிஎஸ்பி சகாயஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் மாணவிகளிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து வீடியோ காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசிய கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை பாதிக்கப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வீடியோ காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசிய தனியார் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு (67), இந்திய தண்டனைச் சட்டம் 354 (A),354(b),354(c),506(1), உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

image

கைது செய்யப்பட்டுள்ள தாஸ்வின் ஜான் கிரேஸை ஸ்ரீ வில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் (சிவகாசியில் உள்ள நீதிபதி இல்லத்தில்) முன்பு ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து நீதிபதி முன் ஆஜரான தாஸ்வின் ஜான் கிரேஸூக்கு 15 நாள் (24.6.22 வரை) நீதிமன்ற காவலில் வைக்க விருதுநகர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, குற்றவாளியை விருதுநகர் சிறைச்சாலை அடைக்க காவல்துறை அழைத்து சென்றனர். மேலும் தனியர் கல்லுாரி சேர்மன செல்போனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மட்டும்தானா வேறு எவறும் இவர் வலையில சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர என ஆராய்ந்து வருகின்றனர் குறிப்பிடதக்கது.

பிற செய்தி: காதல் திருமணம் செய்த தங்கை; படுகொலையில் ஈடுபட்ட அண்ணன் - கும்பகோணத்தில் கொடூரம்

இந்நிலையில் இவ்விவகாரத்தினால் கல்லூரி தற்போது மூடப்பட்டு உள்ளதால் `கல்லூரியை தொடர்ந்து நடத்த வேண்டும்’ எனக்கோரி அந்த கல்லூரியில் பயின்ற சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப அருகில் உள்ள கல்லூரியில் படிப்பை தொடர்வதற்கு ஒரு வார காலத்திற்குள் ஏற்பாடு செய்வதாகவும், மேலும் கல்லூரியின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க வலியுறுத்தியும், மேலும் கல்லூரியில் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கியிருக்கவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்: நவநீதகணேஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்