Published : 13,Jun 2022 07:52 PM

வீட்டை பூட்டிவிட்டு திருமணத்திற்குச் சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

The-shock-that-awaited-those-who-locked-the-house-and-went-back-to-the-wedding

வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளை; திருமணத்திற்கு சென்றிருந்த போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஸ்ரீதேவி மங்களம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை தந்தையும் மகனும், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நிலையில், இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.

image

இந்நிலையில், திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கேட் மற்றும் கதவுகளை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 26 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் வங்கி ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

image

இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிறுகனூர் போலீசார், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து செல்வராஜ் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்