Published : 12,Jun 2022 07:32 PM
அதானிக்கு மின்திட்டங்களை ஒதுக்குமாறு மோடி கூறினாரா? - இலங்கை மின்துறை அமைச்சர் விளக்கம்

இலங்கையில் மின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு தரும்படி பிரதமர் மோடி வற்புறுத்தியதாக கூறியதை இலங்கை மின்துறை அமைச்சர் திடீரென மறுத்துள்ளார்.
இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்தச் செய்தியில், இலங்கை மின் திட்டங்களை அதானி வசம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கூறியதாக அதிபர் கோட்டாபய தன்னிடம் தெரிவித்திருந்ததாக இலங்கை மின் துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அது பொய்யானது என திடீரென அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுவதால், மின்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டிலும் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்றும் அந்த இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.