Published : 10,Jun 2022 07:14 PM
திருப்பதியில் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா விக்கேஷ் சிவன் தம்பதியர் - காரணம் என்ன?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவந்த நயன்தாரா விக்கேஷ் சிவன் செருப்பு காலுடன் மாடவீதியில் நடந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் 150 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் அங்கு திருமணம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், நேற்று திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியர் இன்று திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நண்பகல் 12 மணிக்கு நாள்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து தம்பதியர் விக்கேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவர்களை புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் மாட வீதியில் செருப்பு காலுடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.