Published : 10,Jun 2022 06:34 PM

சட்டவிரோத கிங்காக ஜெயம் ரவி; காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி - கவனம் பெறும் அகிலன் டீசர்

Jayam-Ravi-s-Agilan-Official-Teaser-released

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

பாக்ஸிங்கில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து உருவான ‘பூலோகம்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘அகிலன்’. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். துறைமுகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது.

image

சாம் சி.எஸ். தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நகரின் சட்டவிரோத கிங்னா இந்த அகிலன் தான் என்று துவங்கும் அந்த டீசர் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காவல்துறையின் சேஸிங் காட்சிகளுடன் உள்ளது. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்