Published : 13,Sep 2017 10:04 AM
தமிழக மீனவர்களை மிரட்டி சூறையாடிய இலங்கை மீனவர்கள்

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் வீச்சரிவாள் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றிருக்கின்றனர்.
நேற்று ஆறுகாட்டுத்துறையிலிருந்து 25க்கும் மேற்ட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு பச்சை நிற படகில் வந்த இலங்கை மீனவர்கள், வீச்சரிவாளைக் காட்டி மிரட்டி சுரேஷ்குமார் மற்றும் பாரதி ஆகியோரின் படகிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, வலைகள், திசைக்காட்டும் கருவி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் பலமுறை பாதிக்கப்பட்டு வரும் தங்களின் பிரச்னைக்கு மத்திய மாநில அரசுகள் உரிய தீர்வுகாண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.