Published : 05,Jun 2022 07:46 AM
அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்து – ஒருவர் பலி

ஆவடி அருகே இருசக்கர வாகனமும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பட்டாபிராம் தண்டுரை மேம்பாலத்தில் ஆவடி நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் வலது புறமாக முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது.
இதில், பாலவேடு கிராமத்தைச் சேர்ந்த துளசி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகன்ராஜ் என்பவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால், பாதை மாற்றம் செய்யப்பட்டு பட்டாபிராம் மேம்பாலம் தண்டுரை வழியாக வாகனங்கள் அதிகப்படியாக செல்வதால் இதுபோன்ற தொடர் விபத்துகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.