Published : 04,Jun 2022 11:45 AM
விளையாட அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

தாரமங்கலம் அருகே 17 வயது சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (21). கூலி வேலை செய்து வரும் இவர், பக்கத்து பகுதியைச் சேர்ந்த 17 சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்ற சரண்ராஜ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, சத்தம்போட்டுக் கொண்டே ஒடி வந்து, நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரண்ராஜை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.