திருட்டை தடுக்க புதிய பேக்கிங் சேவை - ஃபிளிப்கார்ட்டில் அறிமுகம்

திருட்டை தடுக்க புதிய பேக்கிங் சேவை - ஃபிளிப்கார்ட்டில் அறிமுகம்
திருட்டை தடுக்க புதிய பேக்கிங் சேவை - ஃபிளிப்கார்ட்டில் அறிமுகம்

முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், திருட்டை தடுக்க கூடிய வகையிலான பேக்கிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் இடையிலேயே திருடப்பட்டு, வேறு பொருட்கள் வைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில், திருட்டை தடுக்க கூடிய வகையிலான புதிய பேக்கிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக, ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பேக்கிங்கை வாங்கும் போது, உடைந்த நிலையிலோ அல்லது சேதமடைந்திருந்த நிலையிலோ இருந்தால் அதனை வாங்க வேண்டாம் என்று, ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது. சமீபகாலமாக ஃபிளிப்கார்ட்டில் அனுப்பப்படும் பொருட்கள் திருடப்பட்டு, அவற்றுக்கு பதிலாக போனுக்கு பதிலாக செங்கல், மணல், உப்பு போன்ற பொருட்கள் வைக்கப்படுவது வாடிக்கையாளர்கள் தொடர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களை தடுக்கவே இந்த புதிய பேக்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com