Published : 04,Feb 2017 01:37 PM

மெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்

Section-144-withdraws-from-Chennai-Marina

சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை மெரினா பகுதியில் மாணவர்கள் மீண்டும் கூடுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம் 144 தடை உத்தரவு மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மெரினாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதேநேரம் மெரினாவில் கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும் தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்