Published : 12,Sep 2017 04:34 PM

மகனுக்காக மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தம்பி ராமையா

Thambi-Ramayya-is-the-director-again-for-the-son

தனது மகன் உமாபதி ராமையா நடிக்க உள்ள படத்தை இயக்க மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார் தம்பி ராமையா. 

முரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படங்களை இயக்கிய தம்பி ராமைய்யா தற்போது நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது மகனையும் அதாகப்பட்டது மகா ஜனங்களே படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தனது மகனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பெற்றுத்தருவதற்காக உலகம் விலைக்கு வருது படத்தை தம்பி ராமையாவே இயக்க இருக்கிறார்.  நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்