Published : 12,Sep 2017 02:37 PM
பெண் ஆனார் விஜய்சேதிபதி

இந்தப் புகைப்படத்தில் கழுத்தில் மணி, சிகப்பு கலர் புடவை, கண்களில் கறுப்புக் கண்ணாடி, காதில் ஜிமிக்கி என அச்சு அசல் அழகான பெண் உருவத்தில் தென்படுகிறார் விஜய் சேதுபதி.
இயக்குநர் தியாகராஜா குமாராஜா இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அப்படத்திற்கு ‘அநீதிக் கதைகள்’என முன்பு பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்தப் பெயர் இயக்குநருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே ‘சூப்பர் டீலக்ஸ்’ என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில்தான் விஜய்சேதுபதி பெண் வேடத்தில் தோன்றுகிறார்.