Published : 12,Sep 2017 02:02 PM
மாநில அளவிலான டென்னிஸ்: ஏபிஎல் க்ளோபல் பள்ளி சாதனை

ஐஜிசிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், ஏபிஎல் க்ளோபல் பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கேம்பிரிட்ஜ் சர்வதேச தேர்வு மையத்தின் கீழ் செயல்படும் ஐஜிசிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில், பிரனவ் பொன்னிவளவன் சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 17 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில், சஞ்சய் சுப்பிரமணியன் சாம்பியன் பட்டம் வென்றார். பிரனவ் பொன்னிவளவன் இறுதிப்போட்டியில், கோயம்புத்தூரை சேர்ந்த ஆதித்யாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். சஞ்சய் சுப்பிரமணியன் மதுரையை சேர்ந்த ஜார்ஜை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெற்றி குறித்து பிரனவ் பேசும்போது, தமிழ்நாடு அளவில் எனக்கு கிடைக்கு மிகச்சிறந்த முதல் வெற்றி என்றார். சாம்பியன் பட்டம் வென்றது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சஞ்சய் சுப்பிரமணியன் கூறினார்.