Published : 28,May 2022 10:09 PM
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!

பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தியபோதும் மக்கள் மீதான சுமையைக் குறைக்க புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ரான் கான் ஆட்சி கவிழ்த்தப்பட்ட நிலையில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டு பின்னர் பிரதமாக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு திவால் ஆவதை தடுக்கும் நோக்கில் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியிருந்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இதனை ஈடு செய்யும் வகையில், ஒரு கோடியே 40 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார். கடந்த ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.