365 கோடியில் பழமை மாறாமல் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 இரயில்கள் சென்னை மார்க்கமாவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரயில் நிலையமும் ஒன்று. கொரோனா பேரிடர் காலத்தில் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தபோது முதல்முதலாக இந்தியாவிலேயே வெளி மாநிலத்தாரை அரசு செலவில் அனுப்பிவைத்த முதல் ரயில் காட்பாடியில் இருந்து தான் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டதையடுத்து நாடு முழுவதும் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மேம்படுத்தப்பட உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றாக காட்பாடி ரயில் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் நாட்டினார்.
இதன்பிறகு தரம் மேம்படுத்தப்பட உள்ள காட்பாடி ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. மேலும் காட்பாடி ரயில் நிலையத்தில் புதிதாக சப்வே, நவீனப்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள், கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல்வேறு வசதிகள் நவீனப்படுத்தப்பட உள்ளது.
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix