
தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடாவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடருவோம் என்று தாங்கள் முன்னரே கூறியது போல தற்போது மனு தாக்கல் செய்துள்ளோம் என்று கூறினார். முதலமைச்சருக்கு துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
தேர்தல் நடந்தால் திமுக தான் போட்டி என்று தினகரன் கூறுவது விளம்பரம் தேடிக் கொள்வதற்காக என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒருபோதும் திமுக கொல்லைப் புறமாக ஆட்சிக்கு வராது என்றும், தேர்தலை சந்தித்தே ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்தார்.