Published : 25,May 2022 07:26 PM

ஈரோடு: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தெலங்கானாவை சேர்ந்த 3 தம்பதிகள் கைது

3-Telangana-couples-who-involved-in-series-of-theft-got-arrested-at-Erode

ஈரோட்டில் தொடர்ச்சியாக 5 வீடுகளில் கொள்ளையடித்த தெலங்கானா தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 30 மற்றும் தெலங்கானாவில் 40 வழக்குகளிலும் தேடப்பட்டுவந்த குற்றவாளிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலப்பாளையம் விநாயகர் கோயில் வீதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பூட்டியிருந்த மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்து தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், அதே பகுதியில் மீண்டும் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இதனிடையே நகர காவல் கண்காணிப்பாளர் அனந்தகுமார் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா-பாரதி, மணி-மீனா மற்றும் விஜய்-லட்சுமி ஆகிய மூன்று தம்பதியினரை கைது செய்து அவர்களிடமிருந்து 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

image

போலீசாரின் விசாரணையில் இவர்கள் மீது தெலங்கானாவில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் சென்னையில் தங்கி தமிழகத்தின் பல மாவட்டங்களில் பூட்டியிருக்கும் பல வீடுகளை நோட்டமிட்டு பிறகு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதேபோல் ஈரோட்டில் கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும்போது ஈரோடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேடப்பட்டுவந்த குற்றவாளிகளை கண்டறிந்து கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்