Published : 12,Sep 2017 04:02 AM

அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கக்கூடாது: தமிழக அரசு உத்தரவு

TN-government-announcement

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

‌பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு ஊழியர்கள் சாதாரண விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தால் ஒப்புதல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பு தவிர மற்ற எந்த வகையிலான விடுப்பிற்கும் அனுமதி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ வாரியத்திடம் இருந்து பெற்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், போலியான மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்