சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி அணி சார்பில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகள் நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடை கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். மனு தள்ளுபடியானதை எதிர்த்து வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகளின் பொதுக்குழு கூட்டத்திற்குத் தடையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
அதே சமயத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்தால் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். முன்னதாக, ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகளின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் அணிகள் சார்பில் நாளை காலை 10 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்