[X] Close

உச்சநீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜனின் மனுவைத் திரும்பப்பெற அனுமதி

Permission-to-get-Mafa-Pandiarajan-s-petition-in-the-Supreme-Court

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.


Advertisement

முன்னதாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கு முன்பு தொடரப்பட்ட மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, வழக்கு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடாக வெற்றி பெற்றதாகக்கூறி மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close