Published : 11,Sep 2017 11:28 AM

பாலியல் புகாரில் தொடர்புடைய பெண் தற்கொலை முயற்சி

The-female-suicide-attempt-involved-in-sexual-abuse

சென்னையிலிருந்து ‌கடத்தப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட புகாரில் தொடர்புடையதாக கூறப்படும் பெண், ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுரேஷ், சித்ரா ஆகியோர், தன் 15 வயது மகளைக் கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமி ஒருவரின் தாய் மாநகர காவல் ஆணையரிடம்  சில தினங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அந்தப் புகாரில் தொடர்புடையதாகக் கூறப்படும் சித்ரா, தனது இரண்டு மகன்களுடன் ஆரணி கோட்டை பகுதியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், சித்ரா உள்ளிட்ட மூவர் மீதும் தண்ணீரை ஊற்றி அவர்களை  மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, பழிவாங்கும் நோக்கோடு தன்மீது பொய்ப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறும் சித்ரா, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து பிரச்னையில் தனது சகோதரர் குமார், வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் சிறுமியை வைத்து தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்