சேலம் மேற்கு தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு மூன்று அணிகளாக செயல்படும் நிலை தற்சமயம் நீடிக்கிறது. இதனால் தொண்டர்களுக்கு, கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு யார் தலைமையில் செயல்படுவது என்ற ஐயம் வலுத்து கொண்டே செல்கிறது.
இதனிடையே, ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள் இணைந்ததால் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தினகரன் அணி விஸ்வரூபம் எடுத்தது. அந்த அணியின் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தனித்தனியே மனு அளித்தன. முதல்வரை மாற்றக்கோரி கோரிக்கை வைத்தன.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோர் சமீபத்தில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!