Published : 11,Sep 2017 08:32 AM

கார்த்தி சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ் நீட்டிப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு

Karthi-Chidambaram-Supreme-court-order

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு லுக்அவுட் நோட்டீஸை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு, வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க சி.பி.ஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, அதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான லுக்அவுட் நோட்டீஸ் வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்ற சி.பி.ஐயின் கோரிக்கையை ஏற்று லுக்அவுட் நோட்டீஸை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்