
எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு நான்கே நாட்களில் 77 ஆயிரத்து 600 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் குறிப்பிட்ட விழுக்காடு பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு
வந்துள்ளன. இதில் முதல் 4 வர்த்தக நாட்களிலும் எல்ஐசி பங்குகள் விலை சரிவுப் போக்கிலேயே காணப்பட்டது. இதனால் எல்ஐசியின் சந்தை மதிப்பு 77 ஆயிரத்து 600 கோடி ரூபாய் குறைந்தது. மேலும் பங்குச்சந்தையில் 5ஆவது பெரிய நிறுவனம் என்ற பெயரையும் எல்ஐசி இழந்தது. இந்த சரிவு முதலீட்டாளர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
இதையும் படிக்கலாம்: கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?