Published : 22,May 2022 09:29 AM

கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

Petrol-price-in-Chennai-has-been-reduced-by-8-rupees-22-paise-per-liter-and-diesel-by-6-rupees-70-paise-per-liter-due-to-the-reduction-of-excise-duty-by-the-Central-Government

கலால் வரியை மத்திய அரசு குறைத்ததன் மூலம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகளும் குறைந்துள்ளன.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்றிரவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 85 காசுகளாக இருந்த நிலையில், தற்போது 102 ரூபாய் 63 காசுகளாக குறைந்துள்ளது. அதேபோல், டீசல் விலையில் ஒரு லிட்டர் நேற்று 100 ரூபாய் 94 காசுகளாக இருந்த நிலையில், இன்று 94 ரூபாய் 24 காசுகளாக குறைந்துள்ளது.

இதையும் படிக்கலாம்: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உட்பட நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்