Published : 22,May 2022 08:01 AM
'பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்' - ராகுல் காந்தி

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு, பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை ஒருங்கிணைப்பது அவசியம் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தியிடம், பாஜகவைப் போன்று ஏன் காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பாஜகவுக்கு வாக்களிக்காத 60 முதல் 70 விழுக்காடு மக்களை வேகமாக ஒருங்கிணைப்பது அவசியம் என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களிடையே வலுவான கட்டமைப்பை உருவாக்கியிருப்பது போன்று, எதிர்க்கட்சிகளும் காங்கிரஸும் ஓர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். பாஜக நாடு முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி வைத்துள்ளதாகவும், ஒரு சிறு பொறி ஏற்பட்டால் மிகப்பெரிய பிரச்னை ஏற்படும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு