Published : 11,Sep 2017 06:10 AM

சைகோ கொலையாளியால் ஒரே வீட்டில் 8 பேர் பலி : அமெரிக்காவில் பயங்கரம்

America-Gun-shot-death

அமெரிக்காவில் மனநிலை பாதிப்படைந்த ஒருவர் நடத்திய தூப்பாக்கிச் சூட்டினால் 7 பேர் பலியாகினர். பின்னர் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவில் உள்ள பிளானோவில் மனநிலை பாதிப்படைந்த ஒருவர், ஒரே வீட்டில் இருந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் குண்டடிபட்ட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சைகோ கொலையாளி போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீஸார் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கொலையாளி சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலையாளி மனநிலை பாதிப்படைந்தவர் என்றும், கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்