அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு சீசன் மிக மோசமாக அமைந்துவிட்டது. 2020 சீசனை விடவும் மோசமானதாக உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் மொத்த 4 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
பின்னர், மைதானத்தில் வர்ணனையாளர் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். முக்கியமாக அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக. ஏனெனில் சென்னை ரசிகர்களுக்கு நேரில் நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது. சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையிலேயே விடைபெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது. வரும் சீசன்களில் அனைத்து மைதானங்களிலும் விளையாடும் போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடை பெறுவதே சரியாக இருக்கும்” என்றார்.
2020 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்த போதும் இதோபோன்றதொரு கேள்வி எழுந்தது. அப்பொழுதும் இதேபோன்றுதான் நிச்சயமாக விளையாடுவேன் என்று தோனி பதில் அளித்தார். அடுத்த ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டி சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றியது. சொந்த மைதானத்தில் விளையாடும் போதும் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பு சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த போதும் ஒவ்வொரு போட்டியின் போதும் மஞ்சள் நிறத்தால் மைதானத்தை ரசிகர்கள் நிரப்பி வருகின்றனர்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'