மோசடி வழக்கில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம் கான். தனக்கு தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக கூறுபவர் என்பதால் இவருக்கு அரசியலில் எதிரிகள் அதிகம். இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக ஆசம் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில வழக்குகளில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதுவரை 89 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 88 வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றுவிட்டார். ஆனால், அரசுப் பள்ளியில் நில மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டும் அவரால் ஜாமீன் பெற முடியாமல் இருந்து வந்தது. அவரது ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்காமலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த செயலை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் ஆசம் கான் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதிகள் எல்.என். ராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
ஒருவரது ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இத்தனை தாமதம் ஏற்படுவது ஏன் என புரியவில்லை. நீதித்துறையின் கேலிக்கூத்தாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. ஆசம் கானின் ஜாமீன் மனு மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்காததால், அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை முடிவு செய்கிறது. அதன்படி, இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்து ஆசம் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது என நீதிபதிகள் கூறினர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்