பிரிட்டனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 13 வயது சிறுவனை ஸ்காட்லேண்டு போலீஸார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் தீவிரவாத இயக்கம் ஒன்றின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாக ஸ்காட்லேண்ட் யார்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் லண்டனில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு தீவிரவாத அமைப்பின் சித்தாந்தங்கள், அதன் கொள்கைகள் போன்றவற்றை இணையதளத்தில் மர்மநபர் ஒருவர் தொடர்ந்து பகிர்ந்து வருவதை போலீஸார் கண்டறிந்தனர். மேலும், அந்த இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
எனினும், அவரது இருப்பிடத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, தீவிரவாத தடுப்புக் குழுவின் உதவியுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மர்மநபர் 13 வயது சிறுவன் என்பதும், மேற்கு லண்டலின் உள்ள ஒரு பள்ளியில் அவர் பயின்று வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று அந்த சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு எப்படி தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது; லண்டனில் வேறு யார் யார் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்