புதுச்சேரியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், திருபுவனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கழிவுநீர் தொட்டியை திறந்தவுடன் விஷ வாயு தாக்கியதில், மயக்கமடைத்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க... விடுதலையானார் பேரறிவாளன் - தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருபுவனை காவல்நிலைய போலிசார் ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!