இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!

இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!

சினிமாவில் வரும் காட்சி போல், நடுரோட்டில் உருட்டை கட்டையால் புதுக் கல்லூரி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் மேற்கு 15-வது தெருவைச் சேர்ந்தவர் உசாமா (22). ராயப்பேட்டை நியூ கல்லூரி வளாகத்தில் உள்ள MEASI இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது நண்பர், அப்துல்ரஹீம் (21), மண்ணடி மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர். இவரும் நியூ கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒருவாரமாக கல்லூரிகளுக்கிடையே கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யார் பங்குபெறுவது என்பது தொடர்பாக சில கல்லூரி மாணவர்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

நேற்று கல்லூரி மாணவர் உசாமா அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ரக்கியூப் முகமது என்பவரை கல்லூரி வளாகத்தில் வைத்து அடித்து விட்டதாக தெரிகிறது. உடனே ரக்கியூப் முகமது தனது நண்பர்களுக்கு ஃபோன் செய்து கல்லூரிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதையடுத்து நேற்று கல்லூரியை விட்டு வெளியே வந்த கல்லூரி மாணவர்கள் உசாமா, அப்துல் ரஹீம் இருவரையும் ரக்கியூப் முகமது மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து உருட்டுகட்டையால் கடுமையாக தாக்கினர்.

சாலையில் துரத்தி துரத்தி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உருட்டு கட்டையால் கொடூரமாக சினிமாவில் வரும் காட்சி போல உள்ளது. இதில் உசாமா என்பவருக்கு தலையின் பின்பகுதியிலும், நெற்றியின் மேல்பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அப்துல்ரஹீமுக்கு வலது காதில் இருந்து ரத்தம், வலது கைமணிக்கட்டில் வீக்கம் உள்ளது. இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 2 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் திமுக வட்டச்செயலாளர் ஒருவரின் மகனும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர் அவரை தப்பி வைக்க முயற்சிப்பதாக காயமடைந்த மாணவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com