வரும் ஜூலையில் தனுஷின் இரண்டுப் படங்கள் வெளியாகின்றன.
தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘மாறன்’ வெளியானது. இதனைத்தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’, ‘தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ராம்குமாரின் ‘வால் நட்சத்திரம்’, மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தினை அடுத்ததாக திரைக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின், படப்பிடிப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் தனுஷ் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விவாகரத்திற்குப் பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் தனுஷை மகிழ்விக்கும்படியாக திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதனால், ’திருச்சிற்றம்பலம்’ படத்தை ஜூலை 1 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படமும் நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது. தனுஷ் பிறந்தநாளையொட்டி இரண்டுப் படங்கள் வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொண்டாட்டம்தான்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai