[X] Close

தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

Trained-by-Excellent-Professors--Minister-Chengottayan

தமிழக மாணவர்களுக்கு தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 


Advertisement

மத்திய அரசின் பொதுத்தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிமையாக எதிர்கொள்‌ளும் வகையில், தலைசிறந்த பேராசியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறந்த பேராசியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்‌ தெரிவித்தார்.

தர்மபுரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, செல்லூர் ராஜு‌ ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ‌‌மைதானத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close