Published : 10,Sep 2017 08:36 AM

இந்திய அணி அறிவிப்பு: அஸ்வின், ஜடேஜாவுக்கு ரெஸ்ட்!

Umesh--Shami-back-in-Indian-cricket-team-for-Australia-ODIs

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி சென்னையில் நடக்கிறது. முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இன்னும் 2 போட்டியில் அவர் விளையாட வேண்டி இருப்பதால், ஆஸ்திரேலிய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இந்த தொடரில் இடம்பெறவில்லை. ஜடேஜாவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

அவர்களுக்குப் பதில் இலங்கை தொடரில் பங்கேற்ற அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், சாஹேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 
வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகது ஷமி இடம் பிடித்துள்ளனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

16 பேர் கொண்ட அணி விவரம் வருமாறு:
விராத் கோலி (கேப்டன்), தோனி, ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரஹானே, அக்‌ஷர் படேல், குல்தீப் யாத்வ், சாஹேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்