Published : 10,Sep 2017 07:06 AM

ஆஸி. கிரிக்கெட்: காத்திருந்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள்

Aus-Cricket--Wait-for-fans-to-buy-tickets

சென்னையில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வரும் 17-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது. காலை 11 மணி முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். 

ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்