
அமைதியாக இருப்பது ரஜினி ஸ்டைல். அடுத்தடுத்து ட்விட் போடுவது கமல் ஸ்டைல்.
‘நீட்’ தேர்வின் முடிவால் அனிதா தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவிகள் எல்லோரும் நீட் தேர்வுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு நொடியும் கொந்தளிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த சமயத்தில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் “வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை. அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் தமிழ்நாடு வணங்குதல் நலம்” என்று கருத்திட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் காந்திய அற வழியில் போராட வேண்டும் என அழைப்புக் கொடுத்துள்ளார். அதேபோல ‘சட்டத்தை நாம் உருவாக்கி உள்ளோம். அதை சரியாக பயன்படுத்துவோம். நல்ல வழிகளில் விவாதங்களில் மேற்கொண்டு கொண்டு செல்வோம். சட்டத்தை அவமதிக்கவோ, கெடுக்கவோ செய்ய வேண்டாம்”என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.