Published : 12,May 2022 08:32 PM

'ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை என் மகன் அபகரித்துக்கொண்டான்’ - தர்ணாவில் தந்தை!

Father-Tarna-against-son-who-robbed-Rs-1-crore-worth-house-at-Salem

சேலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரித்துக்கொண்டு தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்துள்ள தாசநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருப்பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் வெங்கடேசன். 80 வயதான இவருக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் பென்ஷன் பணம் இரண்டு லட்சத்தையும் அவரது மகன் சீனிவாசன் அபகரித்துக்கொண்டு அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட முதியவர் மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

image

ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட வெங்கடேசன் தனது மகளின் அரவணைப்பில் இருந்தார். சொந்த வீட்டில் தான் இறுதிகாலத்தில் குடியிருக்க அனுமதிக்குமாறு மகனிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் முதியவர் வெங்கேடேசன். ஆனால், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் சீனிவாசன் வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதனால் மனமுடைந்த முதியவர் வெங்கடேசன் தனது வீட்டை மீட்டுக்கொடுக்குமாறும், மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

image

இதையடுத்து தகவலறிந்து வந்த மல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து முதியவரை சமாதானப்படுத்தி அவருக்கு சேரவேண்டிய சொத்தை மகனிடம் இருந்து பெற்றுத்தருவதாக போலீசார் கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்