பிரதமர் மோடி மிகவும் உணர்திறன் உடையவர், ஒருமுறை மயிலுக்கு உணவளிப்பதற்காக முக்கியமான கூட்டத்தை பாதியில் நிறுத்தினார் என்று மோடி@20 புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேசியுள்ள்ளார்.
டெல்லியில் 'மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற தலைப்பில் பிரதமரின் அரசியல் பயணத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிரதமர் மோடியின் உணர்ச்சிகரமான பக்கத்தைப் பற்றி பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் அலுவலகத்தில் பசியுடன் இருந்த மயிலுக்கு உணவளிப்பதை உறுதி செய்வதற்காக கூட்டம் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை விவரித்தார். பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் உணர்திறன் கொண்டவர் என்றும், பிரதமரின் ஆளுமையின் அந்த அம்சத்தை வெளிப்படுத்தும் ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார்.
“பிரதம அமைச்சர் அலுவலகத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பறவை ஒன்று கண்ணாடியை அதன் கொக்கினால் தட்டிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மயில் பசியுடன் இருப்பதை உணர்ந்த பிரதமர் மோடி, பறவைக்கு உணவளிக்குமாறு தனது ஊழியர்களிடம் கூறினார். இவ்வளவு தீவிரமான சந்திப்பில் ஈடுபடும் போது மயிலைப் பற்றி யோசிப்பது அவர் எவ்வளவு உணர்ச்சி மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. பிரதமர் திறமையான தலைவர் ஆவார். மோடிக்கு அனுபவம் இல்லாத போதிலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் முதல்வராக பதவியேற்று மிகச்சிறப்பாக பணியாற்றினார்” என்று அமித் ஷா கூறினார்.
2020 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மயிலுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix