Published : 10,Sep 2017 01:56 AM

இந்தியா-ஆஸி. ஒரு நாள் போட்டி: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

India-Vs-Australia-at-chepauk

இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வரும் 17-ம் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி, 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக, சென்னையில் ஒரு நாள் போட்டியில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் ஆரோன் பிஞ்ச், ஜம்பா, கனே ரிச்சர்ட்சன் உள்பட 7 வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். பங்களாதேஷ் பயணத்தில் இடம் பெற்றிருந்த கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர்.

ஆஸ்திரேலிய அணி, இன்று காலை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுன்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கலாம். குறைந்தபட்ச விலை ரூ.1,200. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்