[X] Close

இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்திய ஜிஎஸ்டி வரி எவ்வளவு தெரியுமா...?

BCCI-Pays-Rs-44-Lakh-In-Taxes-In-First-Month-Of-GST-Roll-Out

சரக்கு மற்றும் சேவை கட்டண வரி அமல்படுத்தப்படுத்தப்பட் பிறகு 44 லட்சம் ரூபாயை மத்திய அரசுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வரியாக செலுத்தியுள்ளது. 


Advertisement

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி கடந்த ஜூலை 1–ந்தேதி முதல் அமலானது. இதனையடுத்து ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பல்வேறு தரப்பினர் தங்களது ஜிஎஸ்டி வரி ரிட்டர்ன்ஸை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, ஜிஎஸ்டி வரியாக 44 லட்சத்து 29 ஆயிரத்து 516 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 


Advertisement

இந்திய அணியின் பிசியோதெராபிஸ்ட் பேட்ரிக் பர்ஹார்ட் 59 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டி வரியாக செலுத்தியுள்ளார். வீரர்கள் சிலரும் ஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளார். இதில் அதிகபட்சமாக ஸ்டூவார்ட் பின்னி 92 லட்சம் ரூபாயும், ஹர்பஜன் சிங் 62 லட்சம் ரூபாயும் செலுத்தியுள்ளனர். அக்ஷர் படேலிடம் இருந்து 37 லட்சம் ரூபாயும், உமேஷ் யாதவிடம் 34 லட்ச ரூபாயும் ஜிஎஸ்டி வரியாக பெறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close