Published : 04,Feb 2017 02:55 AM
ஒபாமாவை போல் நான் அல்ல..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை...

ஈரான் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் ட்ரம்ப் இதைத் தெரிவித்தார். தனக்கு முன் அதிபராக இருந்த ஒபாமாவைப் போல மென்மையாக தன்னை ஈரான் நினைத்து விடக்கூடாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த ஈரானை ஒபாமா மீட்டதாக கூறிய ட்ரம்ப், அதை மறந்து நெருப்புடன் ஈரான் விளையாடக் கூடாது என்றார். ஏவுகணை சோதனை நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.