Published : 09,Sep 2017 12:38 PM

ஓமனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: தங்க இடமின்றி தவிப்பதாக வேதனை

About-30-Tamil-nadu-worker-in-Oman-has-problem-with-in-proper-salary--food

ஓமன் நாட்டிற்குப் பணிக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தங்க இடமின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. 

நெல்லை, மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஓமனுக்குச் சென்றவர்களை, அவர்கள் பணியாற்றிய நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், 120 ரியால் ஊதியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 100 ரியால் மட்டுமே ஊதியம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதுவும் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை என்றும் ஓமனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தங்களின் நிலை குறித்து கவனத்தில் கொண்டு இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்