[X] Close

மெக்சிகோ நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு

in-mexico-earthquake-death-toll-rise-61

மெக்சிகோவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

டபாஸ்கோ, ஆக்சகா மற்றும்சியாபஸ் உள்ளிட்ட மாகாணங்களில் பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 61 பேர் பலியானதாகவும், 200 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்அந்நாட்டு அதிபர் என்ரிக்யூ நினா நியடோ தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு நாள் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், கொடிகள் அரைகம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அதிபர் அறிவித்துள்ளார். கட்டிடங்கள் பலவும் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close