சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. போட்டி போட்டுக்கொண்டு மதுபாட்டில் வாங்க வந்த மதுப்பிரியர்கள் ஒருவரை ஒருவர தாக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
சென்னை அம்பத்தூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் வகையில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அருகே செயல்படும் டாஸ்மாக் பாரில் நள்ளிரவு 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுபாட்டிலை வாங்கி செல்லும் மது பிரியர்கள் அங்கேயே ரகளையில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெற்றது. அரை ஷட்டர் திறந்துள்ள டாஸ்மாக் பாரில் மதுபிரியர்கள் திருடன் போல் குனிந்துசென்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு அங்கேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிட்டனர். இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் உதவி ஆணையர் அலுவலகம் அருகே கள்ளச் சந்தையில் மதுவிற்பனையை மதுவிலக்கு காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்