Published : 06,May 2022 06:47 PM

எல் அண்ட் டி இன்ஃபோடெக் – மைண்ட் ட்ரீ இணைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

L-T-Infotech---Mind-Tree-Link--Official-Announcement-

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக எல் அண்ட் டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்களை இணைக்க எல் அண்ட் டி முடிவெடுத்திருக்கிறது.

புதிய நிறுவனம் எல்டிஐ மைண்ட்ரி என்று அழைக்கப்படும். இணைக்கப்பட்ட புதிய நிறுவனத்துக்கு டிசி சாட்டர்ஜி தலைவராக இருப்பார்.

மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் 73 பங்குகள் ஒதுக்கப்படும். இணைக்கப்பட்ட நிறுவனத்தில் தாய் நிறுவனமான எல் அண்ட் டியின் பங்கு 68.7 சதவீதமாக இருக்கும்.

L&t Infotech And Mindtree To Merge To Create Large-scale It Company | Mint

ஒருங்கிணைந்த இரு நிறுவனங்களின் வருமானம் 3.5 பில்லியன் டாலராக இருக்கும். தற்போது எல் அண்ட் டி இன்ஃபோடெக் சந்தை மதிப்பு 1.03 லட்சம் கோடி ரூபாயாகவும், மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 65,285 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. ஒன்றாக இணையும்போது டெக் மஹிந்திரா நிறுவனத்தை விட  இந்நிறுவனம் பெரிய நிறுவனமாக மாறும்.

எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் சஞ்சய் ஜோல்னா தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருக்கிறார். இந்த இணைப்பு 12 மாதங்களில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்