Published : 05,May 2022 09:04 PM

இத்தாலியை சேர்ந்த ரேபான் பிராண்ட் உடன் இணைகிறதா ரிலையன்ஸ்?

Is-Reliance-joining-with-Ray-Ban

இத்தாலியை சேர்ந்த ரேபான் பிராண்ட் உடன் ரிலையன்ஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ரேபான் நிறுவனத்துக்காக பிரத்யேக ஸ்டோர்களை இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் திறக்க இருக்கிறது. மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற பிராண்ட் ஸ்டோர்களிலும் ரேபான் பொருட்களை விற்பதற்கு இரு நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் இந்த குழுமங்கள் இந்த செய்தியை மறுத்திருக்கின்றன.

image

தற்போது ரேபான் கண்ணாடிகள் மல்டி பிராண்ட் ஸ்டோர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.  இதுதவிர முக்கியமான இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலமாகவும் ரேபான் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ரிலையன்ஸ் மூலம் விற்பனை செய்ய திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மற்றும் சர்வதேச பிராண்ட்கள் பலவற்றை ரிலையன்ஸ் இணைத்திருக்கிறது. இரு மாதங்களுக்கு முன்பு சன்கிளாஸ் ஹட் என்னும் சர்வதேச பிராண்டின் இந்திய பிரான்சைசி உரிமத்தை ரிலையன்ஸ் வாங்கியது நினைவுகூறத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்