[X] Close

7 ஆண்டிற்கு பிறகு குஜராத் நிதியை பெற்றுக்கொண்ட நிதிஷ்குமார்

Bihar-Flood-Fund-Nithish

பீகாரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக குஜராத் அரசு வழங்கிய ரூ.5 கோடியை, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 7 ஆண்டிற்கு பிறகு பெற்றுள்ளார்.


Advertisement

பீகாரில் கடந்த 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வழங்கிய 5 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். ‌ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குஜராத் அரசு வழங்கிய நிதியை பெற்றுக்கொண்டதோடு, அம்மாநில அரசு பற்றியும் நிதிஷ்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். 

இவ்விவகாரம்‌ தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்துள்ள நிலையில், கடந்த காலங்களுக்கும், தற்போதுள்ள நிலைமைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்றும், இந்த தருணத்தில் பழைய சம்பவங்களை எண்ணிப்பார்க்கத் தேவையில்லை எனவும் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
 


Advertisement
Related Tags : BiharFloodFund

Advertisement

Advertisement
[X] Close